ஐபிஎல் 2024 : சன் ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் டி20 தொடரின் 66 வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.
இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று ( மே-16) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று (மே 16) நடைபெறும் 66-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4- வது இடத்தில் உள்ளது. குஜராத் அணி 13 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு போட்டியில் முடிவு இல்லாத நிலையில் 11 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 8- வது இடத்தில் உள்ளது.