For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்!

09:59 AM May 08, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024   சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இன்று மோதல்
Advertisement

ஐபிஎல் டி20 தொடரின் 57-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை,  பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா,  ஹைதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத், லக்னோ,  ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  இதுவரை 56 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தி இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.  கே.எல்.ராகுல் தலைமையிலான சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில்5-வது இடத்தில் உள்ளது.  இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

Tags :
Advertisement