Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2024 : மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

07:01 AM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று (ஏப். 22) நடைபெற்ற 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

இதையும் படியுங்கள் : கட்சிக்கு எதிராக போர்க்கொடி – கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து 6ஆண்டுகளுக்கு நீக்கம்!

ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் திணறினர். ரோஹித் சர்மா 6ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மட்டும்  நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த வீரரான நேஹல் வதேரா 49ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

20ஓவர்களின் முடிவில் 9விக்கெட்கள் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, திலக் வர்மா 45 பந்துகளில் 65 ரன்களை  விளாசினார். நேஹால் வதேரா 24 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 180ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 18. 4 ஓவர்களில்  1 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை விளாசினர். அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்களை குவித்தார். ஜோஸ் புட்டலர் 25 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஏழு போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது. அதேபோல 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 3போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6புள்ளிகளைப் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

Tags :
IPL2024MIvsRRMohammad NabiMumbai IndiansNehal WadheraRajasthan RoyalsRRvsMItilak varumayashasvi jaiswal
Advertisement
Next Article