IPL 2024 : லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் - 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
இதையும் படியுங்கள் : “செங்கல்லை இங்கு காட்டி என்ன பயன்... நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்..!” - இபிஎஸ் விமர்சனம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82 ரன்கள் குவித்தார்.இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.