For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு!

07:21 PM Apr 22, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024   ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு
Advertisement

ஐபிஎல் 2024 தொடரின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில்  டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை 7போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஆறு போட்டியில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

அதேபோல 7போட்டிகளில் விளையாடி 4தோல்வி மற்றும் 3போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6புள்ளிகளைப் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

Tags :
Advertisement