For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு!

07:44 PM May 05, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024   டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Advertisement

ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் போட்டி  தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.  இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : தரம்சாலாவில் ஆதிக்கம் செலுத்திய மஞ்சள் பாய்ஸ் – பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி! 

இதையடுத்து, ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மாலை 7.30 மணியளவில்  தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்கிறது.

இதுவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 10 ஆட்டங்கள் விளையாடி உள்ள நிலையில், அதில் 6  ஆட்டங்களில் வெற்றியும், 4 ஆட்டங்களில் தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஆட்டங்கள் விளையாடி உள்ள நிலையில், 7 ஆட்டங்களில் வெற்றியும், மூன்றில் தோல்வியுடன் 14 புள்ளி பெற்றுள்ளது.

Tags :
Advertisement