Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IPL 2024: CSK vs RCB போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் தொடக்கம்!

07:49 PM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

டாடா ஐபிஎல் 2024 முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு மற்றும் விவரங்களை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.

Advertisement

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் 22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே (சென்னை), எம்ஐ (மும்பை) அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் நாளை மறுநாள் (மார்ச் 18) டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, டிக்கெட்டுகளை பே டிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு காலை 9.30 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளது. 

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒரு நபரால் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியை மைதானத்தின் கேலரியில், சி, டி, இ ஆகிய கேலரிகளின் லோயர் பகுதியில் இருந்து காண ரூபாய் 1700 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சி, டி, இ ஆகிய கேலரிகளின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் 4 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஐ, ஜே, கே கேலரிகளின் கீழ் பகுதியில் இருந்து போட்டியைக் காண விரும்புபவர்களுக்கு ரூ.4500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே கேலரியின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூ.4000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் கருணாநிதி கேலரியில் இருந்து போட்டியைக் காண ரூ.7,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி நாளன்று மாலை 4.30 மணிக்கு பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். செல்லப்பிராணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiChepaukChidambaram StadiumCskdhonifeeIPL 2024News7Tamilnews7TamilUpdatesRCBTata IPLTicketVirat kohli
Advertisement
Next Article