For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐபிஎல் 2024 : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்து வீச்சு தேர்வு!

09:32 PM May 04, 2024 IST | Web Editor
ஐபிஎல் 2024   குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்து வீச்சு தேர்வு
Advertisement

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறதுஏற்கனவே 51 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில்,  இன்று பெங்களூருவில் உள்ள  சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 51 வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்  மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதையும் படியுங்கள் : உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

குஜராத் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் நான்கு போட்டியில் வென்று,  புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் போடப்பட்டது. இதையடுத்து  குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Tags :
Advertisement