For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IPhone16series | எந்த நாட்டில் விலை குறைவு தெரியுமா?

12:13 PM Sep 20, 2024 IST | Web Editor
iphone16series   எந்த நாட்டில் விலை குறைவு தெரியுமா
Advertisement

ஐபோன்16 ப்ரோ மேக்ஸ் மலேசியாவில் தான் குறைந்த விலைக்கு விற்பனையாகி வருகிறது.

Advertisement

மக்கள் மத்தியில் ஐபோன் மீதான ஈர்ப்பை தொடர்ந்து அதிகரிக்க வைத்திருக்கிறது. உலக சந்தையில் எவ்வளோ ஸ்மார்ட் போன்கள் இருந்தாலும், அதில் ஆப்பிள் போன்களுக்கு என்று தனி சிறப்பு இருக்கிறது. உலக அளவில் செல்போன் விற்பனை பிரிவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தனது 'இட்ஸ் க்ளோ டைம்' நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஃபோன்களை அறிமுகம் செய்தது.

இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை வெளியிட்டது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட கிட்டத்தட்ட 60 நாடுகளில் இன்று விற்பனையை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்.

இதையும் படியுங்கள் : 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க #Karnataka அரசு முடிவு!

இந்நிலையில், அதிகபட்சமாக துருக்கியில் ரூ.2,69,721 ஐபோன்16 ப்ரோ மேக்ஸ் விற்பனையாகி வருவதாக ஐபோன் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, வளர்ந்து வரும் சந்தைகளில் ஐபோன்16 ப்ரோ மேக்ஸ் விற்பனையாகும் விலை பட்டியலை பற்றி பார்க்கலாம்.

துருக்கி - ரூ.2,69,721

பிரேசில் - ரூ.2,14,128

இந்தியா - ரூ.1,64,801

மெக்சிகோ - ரூ.1,56,870

பிலிப்பைன்ஸ் - ரூ.1,45,293

தாய்லாந்து - ரூ.1,43,109

சீனா - ரூ.1,41,677

மலேசியா - ரூ.1,37,909

Tags :
Advertisement