Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளையும் குஷிப்படுத்த புதிய வகை பார்பி பொம்மை!

03:09 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென்றே கைத்தடி சுமந்து செல்லும் பார்பி பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

Advertisement

குழந்தைகளுக்கு எதாவது வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலும் நம் நினைவுக்கு வருவது பொம்மைகளும், விளையாட்டு உலகமும் தான். காரணம் புதுபொம்மை எதாவது வாங்கிக் கொண்டு கொடுத்தால் அவர்கள் குஷியாகி விடுவார்கள். ஒரு இரண்டு நாட்களுக்கு அதனை தன் கூடவே வைத்து கொண்டு சுற்றுவார்கள். அவர்களுக்கெனவே விதவிதமான பொம்மைகளும் சந்தைகளில் கிடைக்கின்றன. பொம்மைகள் எத்தனை இருந்தாலும் அதில் தனிச்சிறப்பு வாய்ந்தவை பார்பி பொம்மைகள்.

1959-ல் மேட்டல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவை தான் இந்த பார்பி பொம்மைகள். பார்க்கும் போதே கண்ணை கவரும் வகையில் இருக்கும் அவற்றின் கூந்தலும், கண்களுமே பார்பி பொம்மைகளின் சிறப்புகள். இந்த பார்பி பொம்மைகள் பல்வேறு தோல், முடி நிறங்களிலும், உடல் அமைப்புகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மேட்டல் நிறுவனம் முதன்முறையாக பார்வை மாற்றுத்திறனாளி பார்பி பொம்மையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆன்லைனிலும், கடைகளிலும் கிடைக்கும் இவ்வகை பார்பி பொம்மைகள் பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளை சமூகத்தில் அதிக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள பார்வை மாற்றுத்திறனாளி பார்பி பொம்மையானது, வெள்ளை மற்றும் சிவப்பு கைத்தடியைப் பிடித்தவாறு இருக்கிறது. அதன் கருவிழிகள் சற்று மேலே பார்த்தபடி, பார்வைத் திறனில்லை என்பதை உணர்த்தும் வகையில் துல்லியமாக உள்ளன. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அமெரிக்க அறக்கட்டளையுடன் (American Foundation for Blind) இணைந்து, இந்த பார்பி பொம்மையின் கண்கள், உடல், வடிவமைப்பு என அனைத்தையும் மேற்கொண்டுள்ளது மேட்டல் நிறுவனம்.

பொம்மையின் வடிவமைப்பை செம்மைப்படுத்தவும், குழந்தைகளுக்கு திருப்திகரமான விளையாட்டு அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த பார்வை கொண்ட குழந்தைகளுடன் பரிசோதனை நடத்திய பிறகு, பொம்மைக்கு பிங்க் நிற சாட்டின் டி-ஷர்ட் மற்றும் ஊதா நிற டல்லே ஸ்கர்ட் என தொட்டுணரக்கூடிய ஆடைகளை அணிவித்துள்ளது.

பொம்மையை எளிதாக அலங்கரிக்கும் வகையில், அதன் மேற்புறத்தின் பின்பக்கம் பின்னல் போடுவதற்கும் ஸ்கர்ட்டினை கட்டுவதற்கு இடுப்புப் பட்டை உள்ளிட்டவையும் உள்ளன. பார்வை மாற்றுத்திறன் குழந்தைகள் எளிதாக அணுகி உணரும் வகையில் பொம்மையின் பேக்கிங் பெட்டி மீது பிரெய்லியில் பார்பி என்று எழுதப்பட்டுள்ளது.

பார்பி நிறுவன மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டா பெர்கர் "பார்பி என்பது ஒரு பொம்மையையும் தாண்டி மேலானது என்பதை நாங்கள் ஏற்கிறோம். சுய வெளிப்பாட்டையும், சொந்த உணர்வையும் பார்பி பொம்மை பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்றார். மட்டேல் நிறுவனம் ஏற்கெனவே 2022-ம் ஆண்டு காது கேளாதவருக்கான பார்பிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியுடன் பார்பி பொம்மைகளை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
BarbieBarbie dollBlind ChildrenMattel
Advertisement
Next Article