For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெற்காசியாவிலேயே முதன்முறையாக பி.எட்., படிப்பில் குழந்தைகள் உரிமை பாடம்!

03:45 PM Dec 16, 2023 IST | Web Editor
தெற்காசியாவிலேயே முதன்முறையாக பி எட்   படிப்பில் குழந்தைகள் உரிமை பாடம்
Advertisement

தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக, பி.எட் பட்டபடிப்பில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்புக்கான முதன்மை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய நிகழ்வு என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Advertisement

சமூகத்தை மாற்றக்கூடிய படிப்புகளில் குறிப்பிடத்தகுந்தது பி.எட் படிப்பு. மாணவர்கள் அரசியல்வாதிகளாகவும், வழக்குரைஞர்களாகவும், மாவட்ட ஆட்சியர்களாகவும், மருத்துவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் உருவாவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.

இப்படி ஒரு ஆசிரியர் பல தலைமுறைகளை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்.  அதனால் ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்றால் பட்டப்படிப்புடன் பி.எட்., என்ற இளங்கலை தொழில்முறை பட்டப்படிப்பையும் படிக்க வேண்டும்.  இதில், பாடப்பிரிவை எப்படி கற்பிக்க வேண்டும் என்பது குறித்துமட்டுமல்லாது, குழந்தைகளின் உளவியல் குறித்த பாடப்பிரிவுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பி.எட்., படிப்பில் அடுத்த மைல்கல்லாக தெற்காசியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து B.ed., கல்லூரிகளிலும் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு முதன்மை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறியுள்ளார்.

மேலும் இது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய நகர்வு என்றும், குழந்தை உரிமை பாதுகாப்பு பணியில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றும் தேவநேயன் கூறியுள்ளார்.

Tags :
Advertisement