For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விருப்ப மனு அளித்தோரிடம் எப்போது நேர்காணல் - அதிமுக அறிவிப்பு!

08:44 PM Mar 07, 2024 IST | Web Editor
விருப்ப மனு அளித்தோரிடம் எப்போது நேர்காணல்   அதிமுக அறிவிப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனு பெற்றவர்களுக்கான நேர்காணல், மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளோருக்கான நேர்காணல், அதிமுக தலைமை அலுவலகத்தில், 10.03.2024 - ஞாயிற்றுக்கிழமை, 11.03.2024 திங்கட் கிழமை ஆகிய இரண்டு நாட்கள், பின்வருமாறு - நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, தென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

பிற்பகல் 2 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பொள்ளாட்சி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

பிற்பகல் 2 மணிக்கு சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, புதுச்சேரி மாவட்டங்களில் விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வேண்டியும்; அதிமுக பொதுச் செயலாளருகாகவும் விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அனைவரும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், மேற்கண்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தலைமைக் அலுவலகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement