For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

12:28 PM Dec 02, 2023 IST | Web Editor
ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்
Advertisement

ஒடிசாவில் 13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கியது.

Advertisement

சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான மணல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும்,  கலாச்சாரம் முதல் சமூக பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு கருப்பொருள்களில் இந்த விழா நடைபெறுகிறது.
கடற்கரையின் மணலைப் பயன்படுத்தி சிக்கலான வடிவமைப்பில் பல்வேறு சிற்பங்களை கலைஞர்கள் உருவாக்குகின்றனர்.  அவை பெரும்பாலும் செய்திகளை வெளிப்படுத்தும் சிற்பங்களாகவே இருக்கின்றன.

இதையும் படியுங்கள்: “பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

இந்த விழாவானது சர்வதேச மணல் சிற்ப கலைஞர்களை கொண்டாடுவது மட்டுமல்லாமல் உள்ளூர் கைவினைஞர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறது.
சுற்றுலாவை மேம்படுத்துதல்,  மணல் சிற்பத்தின் செழுமையான கலைத்திறனைக் கொண்டாடுதல் மற்றும் கலைஞர்களுக்கு யோசனைகள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்கா,  ஆஸ்திரேலியா,  இலங்கை,  ரஷ்யா,  பெலாரஸ் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சர்வதேச மணல் கலை விழா 2023 இல் பங்கேற்கிறார்கள்.  2011-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் புரியில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் முதல் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கப்பட்டது.  இது ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெறுகிறது.

Tags :
Advertisement