Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோவா திரைப்பட விழா| #JigarthandaDoubleX தேர்வு!

03:35 PM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

கோவா திரைப்பட விழாவிற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகியுள்ளது.

Advertisement

இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழா எப்போதும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச திரைப்பட விழா வரும் நவ.20 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விழாவில் 25 படங்கள் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.

அதில் தமிழ்ப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகி உள்ளது. கடந்த ஆண்டு தமிழில் 5 படங்கள் தேர்வான நிலையில், இந்த ஆண்டு 1 படம் மட்டுமே தேர்வாகி உள்ளது. தெலுங்கில் ஒரே படமாக நடிகை நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன கத காது படம் தேர்வாகியுள்ளது. மலையாளத்தில் 3 படங்கள் தேர்வாகியுள்ளன. அமலா பால் - ஆசிப் அலியின் லெவல் கிராஸ், மம்மூட்டியின் பிரம்மயுகம், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படங்களும் தேர்வாகியுள்ளன.

இதேபோல ஆவண குறும்படங்களும் 20 படங்கள் தேர்வாகியுள்ளன. வணிக சினிமா பிரிவில் 12த் பெயில், மஞ்சுமெல் பாய்ஸ், கல்கி 2898 ஏடி, ஸ்வார்கரத், கர்கானு ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.

Tags :
IFFIIndiaInternational Film Festival 2024
Advertisement
Next Article