For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ‘NETPAC’ விருது!

இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள “பேட் கேர்ள்” திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC விருதினை வென்றுள்ளது.
06:30 PM Feb 08, 2025 IST | Web Editor
‘பேட் கேர்ள்’ திரைப்படத்திற்கு ‘netpac’ விருது
Advertisement

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஜெயராமன், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அது பிராமணர்களின் மனதை புண்படுத்துவதாக இருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது.

இதனிடையே நெதர்லாந்த்தில் உள்ள ரோட்டர்டாம் நகரில் நடைபெற்று வரும் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேட் கேர்ள்’ படம் திரையிட தேர்வு செய்யப்பட்டது. 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவானது ஜனவரி 30ம் தேதியில் இருந்து பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் ரோட்டர்ராம் திரைப்பட விழாவில் ‘பேட் கேர்ள்’ திரைப்படம் NETPAC (Network for the Promotion of Asian Cinema) விருதை வென்றுள்ளது. அறிமுக இயக்குநர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளில் இருந்து தேர்வாகும் திரைப்படங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரு இயக்குநரின் முதல் மற்றும் இரண்டாவது படைப்புகளை மட்டுமே பரிசீலித்து இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இயக்குநர் வர்ஷா பரத்தின் முதல் திரைப்படம் ஆன “பேட் கேர்ள்” படத்திற்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது . இந்த விருதை தேர்ந்தெடுத்த நடுவர் குழு கூறுகையில், “15 திரைப்படங்களை பார்த்து அதிலிருந்து பேட் கேர்ள் திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்” எனக் கூறினர்.

Tags :
Advertisement