For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஓசூரில் சர்வதேச விமான நிலையம்...திருச்சியில் கலைஞர் நூலகம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

11:35 AM Jun 27, 2024 IST | Web Editor
“ஓசூரில் சர்வதேச விமான நிலையம்   திருச்சியில் கலைஞர் நூலகம்    முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

ஓசூரில் சர்வதேச விமான நிலையமும்,  திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டுள்ளனர்.  இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது.  மோட்டார் வாகனங்கள்,  உதிரி பாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.  இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது தமிழகம்.

ஓசூர் கடந்த சில ஆண்டுகளாக அதிக முதலீட்டுகளை ஈர்த்து வருகிறது.  அந்த நகரை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க நவீன உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு.  கிருஷ்ணகிரி,  தருமபுரி பொருளாதார வளர்ச்சி அடைய ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது.  ஓசூரில் 2,000 ஏக்கரில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் விதமாக பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

மேலும் திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Tags :
Advertisement