For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

01:59 PM Jan 12, 2024 IST | Web Editor
 இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
Advertisement

இடைக்கால பட்ஜெட்டால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததுள்ளார். 

Advertisement

கிரிப்டோகரன்சியில் (மெய்நிகர் நாணயம்) ஒன்றான பிட்காயினை அமெரிக்காவில் பங்குச் சந்தை சார்ந்த இடிஎஃப் முதலீட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையில் ஊடக நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட  நிதி, காப்பீட்டுத் துறை மாநாட்டில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

"பிற நாட்டு பொருளாதாரத்துக்கும்,  பங்குச் சந்தைக்கும் உகந்ததாக இருக்கும் சில விஷயங்கள் நமது நாட்டுக்கும் சிறப்பான பலனைத் தரும் என்று கூறிவிட முடியாது.  எனவே,  இந்தியாவில் கிரிப்டோகரன்சி தொடர்பான ஏற்கெனவே உள்ள கொள்கை  (அதாவது....தடை) தொடரவே வாய்ப்ப்புள்ளது.

இப்போதைய மத்திய அரசின் முந்தைய இடைக்கால பட்ஜெட்களை வைத்துப் பார்க்கும்போது இப்போதைய இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித தொய்வும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு உள்நாட்டில் அத்யாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக உணவு சார்ந்த பல்வேறு பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவித்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement