இடைக்கால பட்ஜெட் 2024 - கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன..?
12:37 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement
2024 ஆம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் கல்வி தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
Advertisement
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் உரையில் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது..
- கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
- திறன்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூவாயிரம் ஐடிஐ-க்கள் தொடங்கப்பட்டுள்ளன
- புதிய தேசிய கல்வி கொள்கையின் மூலம் 1.40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும்
- ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்
- கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது