For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நேரடி அந்நிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன?

01:09 PM Feb 01, 2024 IST | Web Editor
நேரடி அந்நிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன
Advertisement

2024-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இவற்றில் நேரடி அந்நிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் உரையில் பொருளாதாரம் மற்றும் நேரடி அந்நிய முதலீடு குறித்த அறிவிப்பு வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது..

  • நாட்டில் வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2.4 மடங்கு அதிகரித்துள்ளது.
  • வருமான வரி கட்டும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
  • தனி நபர் வருமான வரி விலக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. இறக்குமதி வரிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. நேரடி மற்றும் மறைமுக வரிகளிலும் மாற்றமில்லை.
  • நடப்பு நிதியாண்டில் வரி வருவாய் ரூ.26.02 லட்சம் கோடி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • அடுத்த 50 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் விதமாக மாநிலங்களுக்கு ரூ. 75,000 கோடி கடனாக வழங்கப்படும்.
  • 2024-25-ஆம் ஆண்டுக்கான உள்கட்டமைப்பு செலவுத் தொகை ரூ.11.11 லட்சம் கோடியாக அதிகரிகப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க லட்சத்தீவுகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்
  • கடந்த 10 ஆண்டுகளில் அந்நிய முதலீடு 596 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • 2023-24-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவுத் தொகை ரூ.40.90 லட்சம் கோடியாக உள்ளது.
  • 2024-25-ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.1 சதவிகிதமாக குறைக்கப்படும்.
  • 2025-26-ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவிகிதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2024-25-ஆம் ஆண்டில் ரூ. 11.75 லட்சம் கோடி வெளிச் சந்தையில் இருந்து கடனாக திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags :
Advertisement