இடைக்கால பட்ஜெட் 2024: சுற்றுலாத்துறை குறித்த முக்கிய அறிவுப்புகள்!
01:54 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement
2024 ஆம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சுற்றுலாத்துறை தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
Advertisement
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் உரையில் சுற்றுலாத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது..
- 60 இடங்களில் G20 கூட்டங்களை ஏற்பாடு செய்ததன் வெற்றியால் இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிய உலகளாவிய நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தது.
- இதன் மூலம் நமது பொருளாதார பலம் நமது நாட்டை வணிக மற்றும் சுற்றுலாவிற்கு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளது.
- நமது நாட்டில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரும் இப்போது பயணம் செய்ய விரும்புகின்றனர்.
- ஆன்மீக சுற்றுலா உட்பட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் தொழில் முனைவோருக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
- உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க லட்சத்தீவுகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
- சிறிய அளவில் உள்ள சுற்றுலா மையங்களின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்களுக்கு ஊக்குவிக்கப்படும்.
- அந்த சுற்றுலா மையங்களில் வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்காக நீண்ட கால வட்டியில்லா கடன்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.