Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை!

வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
09:43 PM Jan 20, 2025 IST | Web Editor
Advertisement

வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, நகரமைப்பு துறை உதவி இயக்குனர், வேளாண் துறை இணை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றுகளை பெறும் முன், விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக, நகரமைப்பு துறை இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறி, பெரு வெளியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டது.

அதேசமயம், கோயிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்பு இயக்குனர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாட வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அறநிலையைத் துறை சார்பில், பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்வது தொடர்பாக வேளாண்துறை இணை இயக்குனர், தீயணைப்பு துறை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அனுமதியை நகரமைப்பு திட்ட இயக்குனர் ரத்து செய்து புதிய அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறி அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, கடந்த 2024 நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அனுமதி உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், மேற்கூறிய அந்த அனுமதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

அதேசமயம், பெருவெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கும் என்று தெளிவுபடுத்திய உயர்நீதிமன்றம், வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளின் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து வினோத் ராகவேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

வடலூர் வள்ளலார் கோயிலில் சர்வதேச மையம் கட்டுவது சட்டத்தை மீறியது மட்டுமின்றி, வள்ளலாரின் விருப்பத்துக்கும் எதிரானது ஆகும். ஆன்மீக இடத்தை வணிகமயமாக்க முடியாது. ஏனெனில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காகவே அந்த இடம் உள்ளது. இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் புதிய கட்டுமானத்திற்கு தடை விதிக்கிறோம். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அங்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் (Status Quo). மேலும் இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
Interim banSupreme courtvadalurVallalar International Center
Advertisement
Next Article