கேரளாவில் மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மத்திய உளவு துறை பெண் அதிகாரி மேகா (24) சாக்கை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு..
03:08 PM Mar 25, 2025 IST | Web Editor
Advertisement
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத் குடியுரிமை வழங்கல் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை விமான நிலையம் அருகே உள்ள சாக்கை என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மேகா ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டார்.
Advertisement
இதுகுறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் பேட்டை போலீசார் விரைந்து சென்று
அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேகா தற்கொலை செய்து கொண்டாரா அல்ல மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.