Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்ஸ்டா பிரபலம் எலினா லாரியா காலமானார்!

07:52 PM Mar 22, 2024 IST | Web Editor
Advertisement

இன்ஸ்டா பிரபலம் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர் எலினா லாரியா, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக உயிரிழந்தார்.  

Advertisement

மெக்சிகோ நாட்டை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் எலினா லாரியா சில நாட்களுக்கு முன்பு  பிளாஸ்டிக் சர்ஜரி (லிபோசக்ஷன்) அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.  இதனைத் தொடர்ந்து 30 வயதான லாரியா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மார்ச் 19 ஆம் தேதி உயிரிழந்தார்.  இந்த தகவலை லாரியாவின் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

அவர்கள் அந்த பதிவில் "குவாகோலாண்டியாவின் தலைவரும் நிறுவனருமான எலினா லாரியா உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.  அவர், துரதிர்ஷ்டவசமாக, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மார்ச் 19, 2024, செவ்வாய்க்கிழமை, மாலை 3:30 மணிக்கு இறந்தார்" என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு குவாகோலாண்டியா குதிரை சரணாலயத்தை நிறுவினார். தவறாக நடத்தப்பட்ட அல்லது கைவிடப்பட்ட குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் மற்றும் பிற விலங்குகளை மீட்பதே அவரது பணியாக இருந்தது.

Tags :
diedElena LarreaInstagram influencerLiposuction
Advertisement
Next Article