Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'இன்னைக்கு ஒரு புடி' - மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களுடன் விருந்து வைத்த மாமியார்! 

08:34 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திராவில் மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களை சமைத்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். 

Advertisement

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஆஷாதா மாதம் முடிந்து மனைவியை அழைத்துச் செல்வதற்காக வந்த மருமகனுக்கு மாமியார் வீட்டில் விருந்து வைத்தனர்.

இதில் ரவி தேஜாவுக்கு அவருடைய மாமியார் 100 வகையான பலகாரங்களை தயார் செய்து பரிமாறி அசத்தினார்.  100 வகையான உணவுகளுக்கு முன்பு உட்கார்ந்திருத்த தம்பதிக்கு சக்லி முதல் மைசூர் பாக் வரை பரிமாறப்பட்டது. இதனை பார்த்த மருமகன் ரவி தேஜா மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். முன்னதாக இதே போல், ஒரு குடும்பத்தில் 379 வகையான உணவுகளை மாப்பிள்ளைக்கு பரிமாறி மாமியார் குடும்பத்தினர் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆஷாதா மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் போன்றதாகும். ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆஷாதா மாதமாக ஆந்திரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது வழக்கம்.

Tags :
AndraAshada MonthfoodVariety Food
Advertisement
Next Article