For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது! - கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி

06:32 PM Feb 12, 2024 IST | Jeni
திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது    கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி பெறும் முனைப்பில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது.முன்னதாக விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுகவிடம் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை விசிக கொடுத்துள்ளது. 3 தனித் தொகுதியும் 1 பொதுத் தொகுதியும் கேட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. ராமநாதபுரம் தொகுதியையே மீண்டும் தங்களுக்கு ஒதுக்கும்படி திமுகவிடம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கேட்டுள்ளது.

பின்னர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான குழு அண்ணா அறிவாலயத்திற்கு வந்து திமுக குழுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தியது.பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், “பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. திமுக - கொமதேக கூட்டணியானது 2017ல் இருந்து தொடர்ந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே விரிவான தகவல்களை வெளியில் கூற முடியும். கூட்டணி குறித்து அறையில் பேசியதை வெளியில் கூறினால் நன்றாக இருக்காது. சொல்ல வேண்டிய நேரத்தில் தெளிவாக கூறுவேன். தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

இதையும் படியுங்கள் : பிப்.16-ம் தேதி வெளியாகிறது SK21 பட டைட்டில் டீசர்..!

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மரபை மீறிய செயலை செய்துள்ளார். தேசியகீதத்துக்கு மரியாதை தர வேண்டும் என்று கூறிய அவர், தேசியகீதம் பாடப்படும் முன்பாகவே சட்டப்பேரவையில் இருந்து எழுந்து சென்றுள்ளார். சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ஆளுநர் தன்னுடைய கடமையை செய்யாமல் விட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்தியா கூட்டணியின் வெற்றி. ஆளுநர் எங்களுடைய முன்னேற்றங்களுக்கு தடங்கல் செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement