Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முதல்வர் படைப்பகம் மத்திய அரசின் திட்டம் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது" - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்!

10:01 PM Oct 28, 2024 IST | Web Editor
Advertisement

‘முதல்வர் படைப்பகம்’ மாநில அரசின் நிதியில் உருவாகும் திட்டம் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

சென்னை, கொளத்தூரில் குறைந்த கட்டணத்தில் புதிதாக, பன்னோக்கு மையம் பகிர்ந்த பணியிடம் (co working center), 'முதல்வர் படைப்பகம்' என்ற பெயரில் திறக்கப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4-ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதில் படிக்க ஒரு தளம், பணியாற்ற ஒரு தளம், உணவு சாப்பிட ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 'முதல்வர் படைப்பகம்' மத்திய அரசின் திட்டம் என்று தகவல் பரவியது. இந்நிலையில், இந்த தகவல் தவறானது எனவும், ‘முதல்வர் படைப்பகம்’ மாநில அரசின் நிதியில் உருவாகும் திட்டம் எனவும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

https://twitter.com/tn_factcheck/status/1850883134776340877?s=48

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 'முதல்வர் படைப்பகம்' மத்திய அரசின் திட்டம் என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 'முதல்வர் படைப்பகம்' சென்னை கொளத்தூரில் முதலமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சி நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில்முனைவோர் ஒரே இடத்தில் பணிபுரியும் Co Working Space தளம், படிப்பதற்கு ஒரு தளம், உணவு உண்பதற்கு ஒரு தளம் கட்டப்பட்டுள்ளது. பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள Co Working space திட்டம் என்பது மத்திய அரசின் Startup India மற்றும் தமிழ்நாடு அரசின் TN Startup திட்டங்களின் நிதியுதவியுடன் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article