Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Vijay69 - படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்!

07:28 PM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய்யின் 69-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோட் படப்பிடிப்பின்போது, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் - 69 திரைப்படத்துடன் சினிமாவிலிருந்து விலகுவார் எனக் கூறியுள்ளார். இந்த திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : சென்னை வந்தடைந்த மத்திய அமைச்சர் #RajnathSingh – முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்!

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹெச்.வினோத் கூறியதாவது :

“இந்தப்படம் 200 சதவிகிதம் விஜய் திரைப்படமாக இருக்கும். இந்த திரைப்படம் அரசியல் படமில்லை. முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளும்போதே விஜய் சாரை அனைத்து விதமான அரசியல் தலைவர்களும் அனைத்து விதமான வயதினரும் பார்ப்பார்கள் என்பதால், இதில் யாரையும் தாக்காமல் மேலோட்டமான விஷயங்களை வைத்து ஒரு நல்ல கமர்ஷியல் படமாக திட்டமிடப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர்  கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 ஆம் தேதி துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அல்லது ஹைதராபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு  இதன்மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
69th filmactor vijayh vinodOctobershootingvijay
Advertisement
Next Article