Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டி20 போட்டி : இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே அணி!

07:13 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஜிம்பாப்வே அணி நிர்ணயத்துள்ளது.

Advertisement

கடந்த ஜூன் 29 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று (ஜூலை 6) தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

இதையும் படியுங்கள் : ஆசிரியருக்காக பள்ளியை மாற்றிய 133 மாணவர்கள் - தெலங்கானாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அறிமுக வீரரான அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

இதில் அபிஷேக் சர்மா சந்தித்த முதல் ஓவரின் 4-வது பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கெய்க்வாட் 7 ரன்களிலும், ரியான் பராக் 2 ரன்களிலும், ரிங்கு சிங் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். தற்போது வரை இந்தியா 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 19 ரன்களுடனும், துருவ் ஜுரெல் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.

Tags :
INDvsZIMNews7TamilSportsShubmanGillT20CricketTeamIndiaZIMvIND
Advertisement
Next Article