INDvsNZ CT Final | - நியூஸிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் குரூப் ஏ பிரிவிலிருந்து தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அதே போல் குரூப் பி பிரிவில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிபோட்டியில் நுழைந்தது. தொடர்ந்து இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி பைனல் இன்று(மார்ச்.09) துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கான டாஸை வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியா அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.
நியூசிலாந்து அணி சார்பில், வில் யங், ரச்சின் ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லதாம், கிளென் பிலிப்ஸ், மிச்செல் பிரெஸ்வெல், சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஒரூர்க், நாதன் சுமித் ஆகியோர் விளையாடுகின்றனர்.