#INDvsNZ | டெஸ்ட் போட்டியில் விரைவாக 1,000 ரன்கள்…ஜெய்ஸ்வால் புதிய சாதனை!
இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டியில் விரைவாக 1,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 45.3 ஓவரில் 156க்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஓராண்டில் விரைவாக 1000 ரன்களை எடுத்த இளம் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : USElection | அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பில் வெளியான தகவல்!
22 வயதாகும் ஜெய்ஸ்வால் இதுவரை 13 போட்டிகளில் 1,295 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 23 வயதில் 1979ஆம் ஆண்டு திலிப் வெங்சர்கார் இந்த சாதனை படைத்தார். இந்தாண்டு அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர் பட்டியலில் ஜோ ரூட்டுக்கு (1,305) அடுத்து ஜெய்ஸ்வால் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு, ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் 1,007 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 59.23 என்பது குறிப்பிடத்தக்கது. 2 சதம், 6 அரைசதங்கள் இதில் அடங்கும். இதற்கு முன்பு சச்சின் ஓராண்டில் அதிகபட்சமாக 1,562 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.
சச்சின் - 1,562 ரன்கள் (2010)
ஷேவாக் 1,462 ரன்கள் (2008)
ஜெய்ஸ்வால் - 1, 007 ரன்கள் (2024)