For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டி - 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 127 ரன்கள் முன்னிலை.!

07:30 PM Jan 26, 2024 IST | Web Editor
இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டி   2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 127 ரன்கள் முன்னிலை
Advertisement

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் குவித்து 127 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையும் படியுங்கள் ; “பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும்!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். ரோஹித் சர்மா 24 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். விளையாட்டின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், ஷுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 127 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் இழந்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 156 பந்துகளில் 86 ரன்களுடனும், அக்சர் படேல் 62 பந்துகளில் 35 ரன்கள் அடித்தும் களத்தில் இருந்தனர்.

மேலும், மூன்று நாட்கள் மீதம் உள்ள நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளுக்காக விளையாடி, இங்கிலாந்து அணிக்கு வலுவான முன்னிலையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement