INDvsENG 3rd ODI : 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 357 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய தரப்பில் அதிபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களும், ஸ்ரேயஷ் ஐயர் 78 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷீத் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி, 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 214 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்மூலம் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது. இந்தியா, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.