#INDVsBan | முதல் டெஸ்ட் - இந்திய அணி தடுமாற்றம்!
சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இளைவேளைவரை இந்திய அணி 88/3 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சூழலில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங்கில் இறங்கியுள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 6 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிற்து.
இந்த 3 முக்கிய விக்கெட்டுகளையும் வங்கதேசத்தின் ஹசன் மஹ்மது கைப்பற்றினார். தற்போது உணவு இடைவேளைவரை 23 ஓவர்களுக்கு இந்திய அணி 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 37 ரன்களுடனும், ரிஷப் பந்த் 33 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.