Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#IndvsBan 2nd Test : மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!

05:35 PM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Advertisement

வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (செப். 27) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியில் உணவு இடைவேளை வரை வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 74 ரன்களையே எடுத்திருந்தது. பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது போதிய வெளிச்சம் இல்லாததால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags :
BangladeshCricketind vs banIndiaNews7TamilSportsSports Updatetest match
Advertisement
Next Article