For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#INDvBAN | சச்சினின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோலி!

04:50 PM Sep 30, 2024 IST | Web Editor
 indvban   சச்சினின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோலி
Advertisement

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கியது. டெஸ்ட் கிரிக்கெடில் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்தியா அதிவேக 50, 100, 150 மற்றும் 200 ரன்களை கடந்து உலக சாதனை படைத்தது. தற்போது வரை இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் குவித்து, வங்காளதேசத்தை விட முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய ரோகித் 23, ஜெய்ஸ்வால் 72,கில் 39 மற்றும் விராட் கோலி 47 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். முன்னதாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது.

தற்போது வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும் ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27,000 ரன்களை கடந்த 4-வது வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர்.

Tags :
Advertisement