Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பத்தூர் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவு நீர்: துர்நாற்றம் வீசும் பாலாறு!

05:06 PM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் நுரை ததும்பி துர்நாற்றம் வீசுகிறது.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அருகாமையில் செயல்பட்டுவரும் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆற்று நீர் முழுவதும் நுரை ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது பாலாறு. இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Factory WasteNews7Tamilnews7TamilUpdatesPalar Rivertirupattur
Advertisement
Next Article