’சிந்து நதி நீர் விவகாரம்’ - இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!
கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ஆம் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தேதி தாக்குதல் நடத்தின. இதனைத் தொடர்ந்து இரு நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்ப்பட்டு அடங்கியது.
மேலும் இந்திய அரசானது, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய அவர், “ எதிரிகளால் பாகிஸ்தானின் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது. எங்களுக்கான தண்ணீரை நிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டால், உங்களால் மறக்கமுடியாத பாடத்தை பாகிஸ்தான் கற்பிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.