For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர்! எதற்காக தெரியுமா?

12:19 PM Jul 18, 2024 IST | Web Editor
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர்  எதற்காக தெரியுமா
Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கின்னஸ் சாதனை முயற்சியாக மரம் நடும் நிகழ்ச்சி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.  இந்நிலையில், 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் முந்தைய சாதனையையும் இந்தூர் முறியடித்து உள்ளது. இதற்கு முன் அசாம் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 9 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார். மேலும், அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனை சான்றிதழில் எத்தனை லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் பொறிக்கப்பட உள்ளது. இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : மத்திய அரசு வேலைகள் பற்றி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மதுரை எம்.பி. வெங்கடேசன்!

அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது :

"தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement