For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க மனைவிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

08:51 PM Feb 23, 2024 IST | Web Editor
கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க மனைவிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
Advertisement

மத்தியபிரதேசத்தில், வேலையில்லாமல் இருக்கும் கணவருக்கு மாதம் ரூ. 5000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என பெண்ணுக்கு இந்தூர் குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜையினி பகுதியைச் சேர்ந்தவர் அமன்குமார் (23). இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் இரண்டே மாதங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, வரதட்சணை கேட்டு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அமன் துன்புறுத்தியதாக நந்தினி புகாரளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்தப்பெண் தன்னை ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்துவதாக அமன் புகாரளித்துள்ளார். மேலும் நந்தினியின் வற்புறுத்தலினாலேயே படிப்பை நிறுத்தியதாகவும், அதனால் தற்போது வேலை இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பையும் இந்தூர் குடும்ப நல நீதிமன்றம் விசாரித்துள்ளது. விசாரணையில், நந்தினி காவல்துறையினரிடம் பியூட்டி பார்லர் நடத்துவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற பதிவில் தான் வேலையில்லாமல் இருப்பதாகவும், கணவர்தான் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நந்தினியின் கருத்தில் முரண்பாடுகள் இருப்பது விசாரணையில் அம்பலமானது. இதனை அடுத்து, கணவருக்கு மாதம் ரூ.5000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என இந்தூர் குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
Advertisement