“தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்மந்தம் இல்லை” - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி!
தனிப்பட்ட விரோதத்திற்காக செய்யப்படும் கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் எவ்வித சம்மதமும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீ்திமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுட்டுள்ளார். அவர் எடுத்த நடவடிக்கை குறித்து முதலில் அவர் தன்னையே பரிசீலித்து கொள்ள வேண்டும். கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில், 570 கோடி ரூபாய் கன்டெய்னர் லாரில் பிடிப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது.
கடந்த 2017–18ல் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை சிபிஐ தனது விசாரணையை தொடங்கவில்லை. சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். ஆகவே சிபிஐ விசாரைணையை எப்போதும் நாங்கள் கோருவதில்லை.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் இடம் மாற்றப்பட்டார். எஸ்பி சஸ்பென்ட்
செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் கொலை குறித்து எடப்பாடி பேசுகிறார். இதே சென்னையில் மத்திய அமைச்சராக இருந்த தலித் ஏழுமலை மருமகன் கொலை செய்யப்பட்டார். அது யாருடைய ஆட்சியில் நடந்தது?. தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எதிர்க்கட்சி தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம், ஒழுங்கு பிரச்னை. அதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர் தானே எடப்பாடி. கொடநாட்டில் இருந்து கோட்டையை
இயக்கியவர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த கொடநாட்டு வீட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். 5 கொலைகள் கொட நாட்டில் நடந்துள்ளது.
2018, நவ.2ல் கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். 2018, ஆக.14ல் பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் ஆசிரியர் வழிமறிம்மு குத்தி கொலை செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் படுகொலை. கணவன் கைது 2020, டிச.23. 2017-ல் கோவையில் கல்லூரி ஆசிரியர் கறுத்தறுத்து கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார். கள்ளக்காதல் விவகாரம் காரை ஏற்றி கொலை செய்தது ஏன்?
2019-ல் தூத்துக்குடியில் அரசு பள்ளி முன்பு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி அதிமுக ஆட்சியில் பல ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டனர். திமுக ஆட்சியில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன. இவ்வாறு அதிமுக ஆட்சியில் 1672 கொலைகள் நடந்துள்ளன. திமுக ஆட்சியில் ஜூன் மாதம் வரையில் 792 கொலைகள் நடைபெற்றுள்ளன.
தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது. அப்படி
இருந்தும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தான் வென்றது.
வழக்கறிஞர் கொலைக்காக வருந்துகிறோம் அதை பேசுகிற அருகதை எடப்பாடிக்கு
கிடையாது.கண்டிக்கிறோம் அதை பேசுகிற யோகிதை எடப்பாடி க்கு கிடையாது . சம்பவம்
நடந்து விடும் உதயநிதி ஸ்டாலின் நேராக சென்று விசாரித்தார். காவல் ஆணையர் அருண் பொறுப்பேற்றதிலிருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சென்னையில் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைவழக்கில், கைது செய்யப்பட்ட நபர் இறந்தார். அது அதிமுக ஆட்சியில் ஏன் மறைத்தீர்கள்? பொள்ளாச்சியில் என்ன நடந்தது? தற்போது நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் வருந்தத்தக்கது. அதற்காக உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஆனால் அவை குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை” எனப் பேசினார்.