For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் #IndiGo!

02:01 PM Dec 06, 2024 IST | Web Editor
உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில்  indigo
Advertisement

2024 ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்டுள்ள "உலகின் மோசமான விமான நிறுவனங்கள்" பட்டியலில் 4.80 மதிப்பெண்களுடன் 103வது இடத்தைப் இண்டிகோ நிறுவனம் பிடித்துள்ளது.

Advertisement

இந்தியாவின் விமான நிறுவனமான இண்டிகோ, உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் 109 இல் 103வது இடத்தைப் பிடித்துள்ளது. AirHelp Score Report நிறுவனம், ஆண்டுதோறும் உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, அதன் தரப்பட்டியலை வெளியிடும். வாடிக்கையாளரின் மதிப்பீடு, சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தம் 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. வாடிக்கையாளர் சேவை, நேரத்தை கடைப்பிடித்தல் போன்றவற்றில் இண்டிகோ பின்தங்கியுள்ளது.

இந்த பட்டியலில் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் 8.12 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் முறையே 8.11 மற்றும் 8.04 மதிப்பெண்களைப் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இதில் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனமும் இடம் பிடித்துள்ளது. 6.15 மதிப்பெண்களுடன் 61வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இண்டிகோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக விளங்கும் IndiGo, அந்த ஆய்வின் முடிவுகளை ஏற்க மறுக்கிறது. IndiGo தொடர்ந்து நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும், வாடிக்கையாளர் சேவை விஷயத்திலும் சரியான தரத்தைப் பெற்றுள்ளது" என தெரிவித்துள்ளது.

மேலும், ”ஐரோப்பிய ஒன்றிய உரிமைகோரல் செயலாக்க நிறுவனமான AirHelp வெளியிட்ட தரவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement