For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியர்களுக்காக 14 பிரத்யேக மொழிகளில் உருவாகும் பாரத் ஜிபிடி!

06:24 PM Dec 12, 2023 IST | Web Editor
இந்தியர்களுக்காக 14 பிரத்யேக மொழிகளில் உருவாகும் பாரத் ஜிபிடி
Advertisement

இந்தியாவில் ஏஐ பாரத் - ஜிபிடி எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை கோரோவர்.ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

Advertisement

கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் - ஜிபிடி (Bharath- GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த தொழில்நுட்பம் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக 14 இந்திய மொழிகளில் உரையாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் கிளவுட் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இதையும் படியுங்கள்: வெள்ளச் சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு: தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!

இதில் எழுத்து, ஒலி மற்றும் காணொளி மூலம் உரையாடல்களை மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய கோரோவர் நிறுவனர் அன்குஷ் சபர்வால், 'பாரத்-ஜிபிடி உடனான எங்களது குறிக்கோள் வெறும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதைத் தாண்டி, நாட்டின் கலாச்சார பாரம்பரியங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதுதான்.

கூகுள் கிளவுட் அமைப்பில் உருவாக்கப்படும் இந்த செய்யறிவு தொழில்நுட்பம் நம்பகமான முறைகள் மூலம் தகவல்களைக் கையாளக்கூடியது எனத் தெரிவித்துள்ளார். கூகுள் கிளவுட் இந்தியா (Google Cloud India) வின் நிர்வாக இயக்குநர் பிக்ரம் சிங் பேடி, கோரோவர் ஏ.ஐ. உடன் இணைந்து இந்தியாவுக்கென ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உலகிலேயே ஒரு நாட்டுக்கென ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement