உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்! முதலிடம் யார் தெரியும்?
2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுகான பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் இந்த பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 100 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய மற்றும் ஆசிய அளவில் முதலிடத்தில் இருப்பதோடு உலகளவில் 9 ஆவது இடத்தில் இருக்கிறார். அதேவேளை, அதற்கு அடுத்ததாக உலகளவில் 17-வது இடத்தில் 84 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் அதிக சொத்துள்ள பெண்ணாக சாவித்திரி ஜிண்டால் திகழ்கிறார். இவரது சொத்து மதிப்பு 33.5 பில்லியன் அமெரிக்க டாலர். இந்த பட்டியலில் 25 இந்தியர்கள் புதிதாக இடம்பெற்றுள்ள நிலையில், முன்னர் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்ட்ரி இடம்பெற்றவில்லை.
முதல் 10 இடத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்புகள்:
- முகேஷ் அம்பானி - ரூ. 8.7 லட்சம் கோடி
- கெளதம் அதானி - ரூ. 6.3 லட்சம் கோடி
- ஷிவ் நாடார் - ரூ. 2.7 லட்சம் கோடி
- சாவித்ரி ஜிண்டால் - ரூ.2.5 லட்சம் கோடி
- திலிப் ஷாங்வி - ரூ.2 லட்சம் கோடி
- சைரஸ் பூனாவாலா -ரூ. 1.6 லட்சம் கோடி
- குஷல் பால் சிங் -ரூ. 1.5 லட்சம் கோடி
- குமார் பிர்லா - ரூ. 1.4 லட்சம் கோடி
- ராதாகிஷன் தமானி - ரூ.1.3 லட்சம் கோடி
- லட்சுமி மிட்டல் - ரூ.1.2 லட்சம் கோடி