104 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பியுள்ளது அமெரிக்க அரசு.
டெக்சாஸின் சான் அன்டோனியோவிலிருந்து புறப்பட்ட C-17 அமெரிக்க இராணுவ விமானம், பிற்பகல் 1.59 மணிக்கு அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 79 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் என 104 இந்தியர்களை அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரில், தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்; 3 பேர், மகாராஷ்டிரா, 3 பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் சண்டிகரைச் சேர்ந்தவர்கள். நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிடிபட்டவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.