Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அலைமோதிய கூட்டம் | 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை #Metro சேவை...மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

03:28 PM Oct 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக். 6) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து மெரினாவில் இருந்து மக்கள் கிளம்பி வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் புறப்பட்ட நிலையில் பல இடங்களிலும் நெரிசல் காணப்படுகிறது. சென்னை அண்ணா சாலை, ஆர்.கே. சாலை, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல இடங்களில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி செல்கின்றன.

இதையும் படியுங்கள் : தொடரும் போராட்டம் | #Samsung நிறுவன மேலாளர்களுடன் அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுவார்த்தை!

இந்த நிலையில் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"வண்ணாரப்பேட்டை - ஏஜி டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் இயங்கும். மேலும் காரிடார்-1 பிரிவில் விம்கோ நகர் டிப்போ - விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயங்கும். பசுமை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையே வழக்கம்போல 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiIAFIndianAirForceMarinaBeachmetro train serviceMetroTrainNews7Tamilnews7TamilUpdatesTNGovt
Advertisement
Next Article