For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிரணி!

02:34 PM Dec 16, 2023 IST | Web Editor
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிரணி
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றி படைத்துள்ளது.

Advertisement

நவி மும்பையில் கடந்த வியாழக்கிழமை (டிச.14) தொடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா,  முதல் இன்னிங்ஸ் 428 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து,  நிலையில்லாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.  மிடில் ஆர்டரில் வந்த நேட் ஸ்கீவர் 10 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக அமைந்தது.

தொடர்ந்து இங்கிலாந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  2-வது இன்னிங்ஸில் இந்தியா 186/6-க்கு டிக்ளேர் செய்ய இங்கிலாந்து 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  தீப்தி சர்மா 4, பூஜா வஸ்த்ரகர் 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இதன் மூலம் 347 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது.

இதையும் படியுங்கள்:  நீங்க மட்டும் வந்தா போதும், விசா வேண்டாம் – ஈரான் அரசின் புதிய அறிவிப்பு!

டி20-யில் 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற,  ஒரே டெஸ்ட் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பெற்று இந்திய மகளிரணி கோப்பையை வென்றுள்ளது.  முதல் இனிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய தீப்தி சர்மா ஆட்ட நாயகி விருது பெற்றார்.

இதுவரை மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற அதிகபட்ச வெற்றி:

347 ரன்கள்: இந்தியா - இங்கிலாந்து, 2023
309 ரன்கள்: இலங்கை- பாகிஸ்தான், 1998
188 ரன்கள்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா, 1972
186 ரன்கள்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, 1949
185 ரன்கள்: இங்கிலாந்து- நியூசிலாந்து, 1949

Tags :
Advertisement