"இந்திய பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்க" - #Indiantravelinfluencer தன்யா கானிஜோவ் வேண்டுகோள்!
இந்தியா வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என வெளிநாடு நண்பர்களுக்கு Indian travel influencer தன்யா கானிஜோவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது பெண் முதுநிலை பயிற்சி டாக்டர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் டாக்டரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது மனித உரிமை ஆணையம்.
இதையும் படியுங்கள் : #SchoolBooks விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த தன்யா கானிஜோவ் என்பவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவர். இவர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது :
"இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வெளிநாட்டில் உள்ள எனது பெண் நண்பர்கள் யாரும் இங்கு வர வேண்டாம். இந்தியாவில் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் வரை தயவுசெய்து யாரும் பயணிக்க வேண்டாம். தயவு செய்து இந்தியா வருவதை தவிர்க்கவும்.இது எனது அன்பான வேண்டுகோள்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Safety standards for women in India are horrible. My sincere request to all my women friends abroad. Please don’t travel here unless our dear leadership seriously creates a safer environment for women. Please avoid coming to India at all costs! #kolkata #RGKarHospital…
— Tanya Khanijow (@TanyaKhanijow) August 12, 2024