For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ChessOlympiad | 3-வது சுற்றிலும் இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றி!

03:28 PM Sep 14, 2024 IST | Web Editor
 chessolympiad   3 வது சுற்றிலும் இந்திய அணிகள் ஹாட்ரிக் வெற்றி
Advertisement

செஸ் ஒலிம்பியாட்டின் 3-ஆவது சுற்றிலும் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.

Advertisement

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ஆவது சுற்றிலும் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன. இந்திய அணிகளுக்கு இது ஹாட்ரிக் வெற்றி என்பது குறுப்பிடத்தக்கது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன. முதல் சுற்றில் 4-0 என வென்ற இந்திய ஆடவர் அணி 2ஆவது சுற்றில் 4-0 என ஐஸ்லாந்தை வீழ்த்தியது. 3-ஆவது சுற்றில் இந்திய ஆடவா் அணி - ஹங்கேரி ‘பி’ அணியுடனும், மகளிர் அணி - சுவிட்ஸா்லாந்துடனும் மோதின.

ஹாட்ரிக் வெற்றியில் இந்திய அணிகள் 3-ஆவது சுற்றில் 3-1 என மகளிர் அணியும் ஆடவர் அணி 3.5 - 0.5 என புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றி பெற்றன. மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 3 சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல்நிலையில் உள்ளன.

இதையும் படியுங்கள் : ‘#Amaran’ படத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவுசெய்தார் சிவகார்த்திகேயன்!

முதலிடத்தில் நீடிக்கும் ஆடவர் அணி 12 போட்டிகளில் இந்திய ஆடவர் அணி இதுவரை 0.5 புள்ளிகள் மட்டுமே எதிரணியினருக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3 நாட்களாக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய ஆடவர் அணி நீடிக்கிறது.செப் 23 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement