பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி...!
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முன்னேறி இருந்தன.
இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இன்று இலங்கையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது .நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புலா சரேன் 44 ரன்கள் அடித்து அசத்தினார்.இதன் மூலம் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.