#ChessOlympiad | தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி!
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் இந்திய அணி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. இன்று நடைபெற்ற 10வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. இதில் அர்ஜூன் எரிகேசி, குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
இறுதியில் இந்தியா 2.5 – 1.5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 19 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தங்கத்தை நெருங்கியது. அதேபோல், இந்திய மகளிர் அணி சீனாவுடன் நடந்த போட்டியில் 2.5 – 1.5 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 17 புள்ளிகள் பெற்று, 10 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகித்தது.
இதையும் படியுங்கள் : “வேள்பாரி நாவலின் கதையை திரையில் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – இயக்குநர் #Shankar
இந்நிலையில், ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர்கள் முகேஷ், அர்ஜுன் வெற்றி பெற்றனர். இதன் மூலம், இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் உறுதியாகி உள்ளது. ஹங்கேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்று இருப்பது இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.